அடுத்த சில ஆண்டுகளில் 45 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

மின்னணுவியல் துறையில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு
கோப்புப் படம்
கோப்புப் படம்

இந்திய மின்னணுவியல் (எலக்ட்ரானிக்ஸ்) துறையில் 20 லட்சம் பேர் வேலைவாய்ப்பைப் பெற்றதாவும் உள்ளூர் மின்னணு சில்லுகள் தயாரிப்பு முன்னெடுப்பின் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் 45 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் எனவும் மத்திய தொழில்நுட்பத் துறைச் செயலர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்திய எண்மவியல் மாநாடு 2024-ல் கலந்துகொண்டு பேசியவர் குறைக்கடத்தி எனச் சொல்லப்படுகிற செமிகண்டக்டர் தயாரிப்பு சார்ந்த தளம் நாடு வளர்வதற்கான பெரிய வாய்ப்பைத் தரும் எனத் தெரிவித்தார்.

அவர், “இந்த தயாரிப்பு துறைக்குள் நிறைய நிறுவனங்கள் வரவுள்ளன. அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் பெரிய வளர்ச்சி ஏற்படவுள்ளது. நாம் நுழைவதற்கான வாய்ப்பு திறந்துள்ளது. 20 லட்சம் பேருக்கு இந்தத் துறையில் வேலைவாய்ப்பை நெருங்கியுள்ள நிலையில் அடுத்த சில ஆண்டுகளில் 45 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு என்கிற அளவில் இது வளரக்கூடும்” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com