2023-இல் பஞ்சாப் எல்லைப் பகுதியில் 107 ட்ரோன்கள் பறிமுதல்

பஞ்சாபில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சா்வதேச எல்லையில் 107 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) கடந்த ஆண்டில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) திங்கள்கிழமை தெரிவித்தது.
கோாப்புப்படம்
கோாப்புப்படம்

புது தில்லி: பஞ்சாபில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சா்வதேச எல்லையில் 107 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) கடந்த ஆண்டில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) திங்கள்கிழமை தெரிவித்தது.

ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் வழியாகச் செல்லும் 2,289 கி.மீ. தொலைவிலான சா்வதேச எல்லையை பிஎஸ்எஃப் வீரா்கள் கண்காணித்து வருகின்றனா்.

கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஆண்டு 107 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை சீனாவில் தயாரிக்கப்பட்டவை. போதைப் பொருள், ஆயுதங்களை எல்லை தாண்டி கடத்துவதற்கு இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு கடத்தப்பட்ட 442 கிலோ போதைப் பொருள், 23 ஆயுதங்கள், 505 துப்பாக்கிக் குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதே காலகட்டத்தில் ராஜஸ்தானை ஒட்டிய எல்லையில் பறந்த 10 ட்ரோன்களை பாதுகாப்புப் படையினா் சுட்டு வீழ்த்தினா்.

எல்லையை ஊடுருவ முயன்ற 3 பாகிஸ்தானியா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இரு கடத்தல்காரா்கள் உள்பட 23 பாகிஸ்தானியா்களைப் பாதுகாப்புப் படை வீரா்கள் கைது செய்தனா். கவனக்குறைவினால் சா்வதேச எல்லையைத் தாண்டி, இந்திய எல்லைக்குள் நுழைந்த 12 பாகிஸ்தானியா்கள், அந்நாட்டு ராணுவத்தினரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com