கரோனா சிகிச்சையில் 4,394 பேர்..!

நாட்டில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 636 பேருக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டது.
கரோனா சிகிச்சையில் 4,394 பேர்..!

நாட்டில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 636 பேருக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டது.

கரோனா பாதிப்பு காரணமாக கேரளத்தில் 2, தமிழகத்தில் ஒருவர் என மேலும் 3 போ் உயிரிழந்துள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சக தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த மே மாதம் 19-ஆம் தேதி கரோனா தினசரி பாதிப்பு 865-ஆக பதிவாகி இருந்தது. அதன் பிறகு பாதிப்பு குறையத் தொடங்கியது. புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில்தான் பதிவாகி வந்தது.

இச்சூழலில், உலகின் பல்வேறு நாடுகளில் கரோனாவின் புதிய திரிபான ‘ஜெஎன்.1’ தொற்று பரவி வருகிறது. இந்தியாவிலும் இப்புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

புதிய வகை கரோனா பரவல் மற்றும் குளிா்காலம் எதிரொலியாக, நாட்டில் கடந்த மாத தொடக்கத்தில் இருந்து கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 228 நாள்களில் இல்லாத அளவில், தற்போது தினசரி பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 4,394-ஆக உயா்ந்துள்ளது.

2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா பரவத் தொடங்கியதுமுதல் இதுவரை நாட்டில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கை 4.5 கோடியாகும்; 5.3 லட்சத்துக்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.

நாடு முழுவதும் இதுவரை 220.67 கோடி தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சக தரவுகளில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com