வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

மாடு, தங்க மோதிரம், டிரெட்மில்.. நிதீஷ் பட்டியலிட்ட ரூ.1.64 கோடி சொத்துகள்

மாடு, தங்க மோதிரம், டிரெட் மில் என ரூ.1.64 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 9:18 am


பாட்னா: பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டிருக்கும் சொத்துப் பட்டியலில், மாடு, தங்க மோதிரம், டிரெட் மில் என ரூ.1.64 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை செயலகத் துறை இணையதளத்தில், பிகார் முதல்வர் மற்றும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் சொத்துப் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக ஞாயிற்றுக்கிழமை மாலை பதிவேற்றம் செய்யப்பட்டது.

நிதீஷ் குமார் வெளியிட்டிருக்கும் சொத்துப் பட்டியலில், ரூ.22,552 ரொக்கமாகவும், வங்கிகளில் வைப்புத் தொகையாக ரூ.49,202ம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரூ.11.32 லட்சம் மதிப்பிலான கார், ரூ.1.28 லட்சம் மதிப்பிலான இரண்டு தங்கம் மற்றும் வெள்ளி மோதிரங்கள், 13 மாடுகள், 10 கன்றுகள், உடற்பயிற்சி செய்வதற்கான டிரெட்மில், சைக்கிள், மைக்ரோவேவ் ஓவன் என அசையும் சொத்துகள் இருப்பதாகவும், தில்லியின் துவாரகாவில் ரூ.13.78 லட்சம் மதிப்பில் 2004ஆம் ஆண்டில் வாங்கிய ஒரே ஒரு குடியிருப்பு தற்போது ரூ.1.48 கோடி மதிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, நிதீஷ் குமார் தனது பெயரில் ரூ.75.53 லட்சம் மதிப்பில் சொத்துகள் இருந்ததாகத் தெரிவித்திருந்தார். இந்த ஆண்டு, சொத்து மதிப்பு அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணமாக, தில்லியில் உள்ள வீட்டின் சொத்து மதிப்பு அதிகரித்திருப்பதே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதீஷ் குமாரின் தலைமையிலான அரசு, அனைத்து அமைச்சர்களும் ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்தில், தங்களது சொத்துப் பட்டியலை வெளியிட வேண்டும் என்பதை கட்டாயமாக்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.