பாக்கெட்டில் இருக்கும் ஒரு பிஸ்கட் விலை என்ன? இனி தெரிய வரும்

ஒட்டுமொத்த விலையுடன், ஒரு யூனிட்டுக்கான விலையை அச்சிட வேண்டும் என்பது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
பாக்கெட்டில் இருக்கும் ஒரு பிஸ்கட் விலை என்ன? இனி தெரிய வரும்


புது தில்லி: பொட்டலமிடப்படும் அல்லது பாக்கெட் செய்யப்படும் அனைத்துப் பொருள்களின் மீதும், தயாரிப்பு நிறுவனங்கள், ஒட்டுமொத்த விலையுடன், ஒரு யூனிட்டுக்கான விலையை அச்சிட வேண்டும் என்பது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

அதுபோல, ஒவ்வொரு தயாரிப்பு மற்றும் இறக்குமதி நிறுவனங்களும், ஒரு பொருளின் மேல் அட்டையில் அது தயாரிக்கப்பட்ட மாதம் மற்றும் ஆண்டை கட்டாயம் அச்சிட வேண்டும் என்பதும் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

பல முறை மத்திய அரசு இந்த திட்டத்தைக் கொண்டு வர முயற்சித்து, அது முடியாமல் போன நிலையில், இன்று நடைமுறைக்கு வந்துள்ளது.

இறக்குமதியாளர்கள், பொருள்கள் இறக்குமதி செய்யப்படும் தேதியை மட்டும் குறிப்பிட விரும்பினர். ஆனால், புதிய விதிமுறைப்படி, தயாரிப்பாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், ஒரு கிலோ அல்லது ஒரு லிட்டருக்கும் மேற்பட்ட பாக்கெட் பொருள்கள் அடங்கிய பேக்கேஜ் பொருள்களில், தலா ஒரு லிட்டர் அல்லது ஒரு கிலோ பொருளுக்கான விலையை குறிப்பிட வேண்டும் என்பது நடைமுறைக்கு வந்துள்ளது. 

அதுபோலவே, ஒரு கிலோ அல்லது ஒரு லிட்டருக்கும் குறைவான பாக்கெட் பொருள்களில், ஒரு கிராம் அல்லது ஒரு தொகுதி (உதாரணம் ஒரு பிஸ்கெட்) உற்பத்திக்கான விலையை குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பென்சில், பேனாக்கள் கொண்ட ஒரு பாக்கெட்டில், எம்ஆர்பி எனப்படும் ஒட்டுமொத்த விலையுடன், ஒரு பென்சில் மற்றும் ஒரு பேனாவின் விலையையும் தனியாகக் குறிப்பிட வேண்டும்.  இது வாங்குவோர் சிறந்த பொருளை தேர்வு செய்ய உதவும் என்று கூறப்படுகிறது. 

இதனை பல நிறுவனங்கள் செயல்படுத்தத் தொடங்கிவிட்டன். செயல்படுத்தாத நிறுவனங்கள் மீது விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com