
கர்நாடகத்தின் பெலகாவியில் தோட்டத்தில் பூவை பறித்த குற்றத்திற்காக மூக்கைத் துண்டித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள பசுர்டே கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அங்கன்வாடி ஊழியரான சுகந்தா மோரே(50) இவரின் குழந்தைகள் அருகில் உள்ள தோட்டத்தில் பூக்களைப் பறித்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த தோட்டத்தின் சொந்தக்காரரான கல்யாணி சுகந்தாவிடம் சண்டையிட்டுள்ளார். இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த கல்யாணி சுகந்தாவின் மூக்கை கத்தியால் துண்டித்துள்ளார்.
இதையடுத்து ரத்தப்போக்குடன் சுகந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலை தற்போது மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள குற்றவாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.