கோப்புப்படம்
கோப்புப்படம்

உ.பி.யில் மருத்துவர் சுட்டுக் கொலை!

உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூரில் மருத்துவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூரில் மருத்துவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜான்பூரில் உள்ள ஜலால்பூர் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலையில் இந்த சம்பவம் நடைபெற்றது. 

ஆயுர்வேத மருத்துவரான திலத்தாரி சிங் படேல்(35). அவரது வீட்டிற்குள் மர்ம நபர்கள் நுழைந்து அவரை சுட்டுக் கொன்றுள்ளனர். அவசரக்கால நோயாளிகள் அவரை அணுகுவதற்கு வசதியாக இரவில் தனது வீட்டின் கதவை எப்போதும் திறந்துவைத்திருப்பார். இந்த நிலையில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அவரை சுட்டுக்கொன்றுள்ளனர். 

கடந்த எட்டு ஆண்டுகளாக மருத்துவர் வாடகை வீட்டில் கிளினிக் நடத்திவந்துள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் எஸ்பி தெரிவித்தார்.

சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவான குற்றவாளிகளைப் பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com