வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மும்பை: அடுக்குமாடி குடியிருப்பின் 21-வது மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பின் 21-வது மாடியில் இருந்து இளைஞர் குதித்து தற்கொலைகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
கோப்புப் படம்.
Updated On :6 ஜனவரி 2024, 10:52 am

DIN

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பின் 21-வது மாடியில் இருந்து இளைஞர் குதித்து தற்கொலைகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பை செவ்ரியில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பின் 21வது மாடியில் இருந்து 32 வயது இளைஞர் ஒருவர் நேற்று மதியம் 2 மணியளவில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கட்டடத்தின் காவலாளி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அங்கு விரைந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த இளைஞரிடமிருந்து எந்த விதமான தற்கொலைக் கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றவில்லை. இளைஞர் தற்கொலை செய்துகொண்டபோது, ​​அவரது அறையில் மற்ற நண்பர்கள் இருந்துள்ளனர். 
எனவே, அவரது அறையில் இருந்த மூன்று நண்பர்களை காவல்துறையினர் விசாரிக்கின்றனர். இந்த நண்பர்கள் அனைவரும் இரவு வெகுநேரம் வரை பார்ட்டியில் இருந்தனர் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.