மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

கடவுள் தரிசனம் போல எங்குப் பார்த்தாலும் மோடியின் படங்கள்: கார்கே

நாடாளுமன்றத்தில் பிரச்னைகளை எழுப்ப எங்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.  

நாடாளுமன்றத்தில் பிரச்னைகளை எழுப்ப எங்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.  

தில்லியில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை லோகோவை வெளியிட்டு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

பாரத நியாய யாத்திரை (பாரத நீதிப் பயணம்) என்ற பெயரிலான இந்த நடைப்பயணம் நாட்டின் கிழக்கிலிருந்து தொடங்கி நாகாலாந்து, அஸ்ஸாம், மேகாலயம், மேற்குவங்கம், பிகாா், ஜாா்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கா், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களைக் கடந்து கடைசியாக நாட்டின் மேற்கான மகாராஷ்டிரம் வரை சுமாா் 6,200 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட்டு, மாா்ச் 20-ஆம் தேதி நிறைவடைகிறது. 

பாரத் ஜோடோ நியாய யாத்திரை நாட்டின் அடிப்படை சமூக, அரசியல் மற்றும் பொருளாதார பிரச்னைகளில் கவனம் செலுத்தும். இந்தியா கூட்டணியின் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தின் உறுப்பினர்களும் அணிவகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தெற்கிலிருந்து வடக்கே பாரத் ஜோடோ யாத்திரை நடத்தப்பட்டதைப் போலவே, கிழக்கிலிருந்து மேற்காக நடைபெறும் பாரத் ஜோடா நியாய யாத்திரை மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தும்.

நாடாளுமன்றத்தில் எங்கள் பிரச்னைகளை எழுப்ப அரசாங்கம் எங்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை, எனவே காங்கிரஸ் பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மேற்கொள்கிறது. இதன் மூலம் நாங்கள் மக்களிடம் நியாயம் கேட்போம் என்று கார்கே தெரிவித்தார். 

மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. அங்குச் செல்ல பிரதமர் மோடிக்கு நேரமில்லை, ஆனால் எங்குச் சென்றாலும் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். காலையில் விழித்தவுடன் கடவுளைத் தரிசிப்பது போல் எங்குப் பார்த்தாலும் மோடியின் படங்கள் உள்ளன.  

எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்துவதற்காக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளைத் தவறுதலாக பிரதமர் மோடி பயன்படுத்துகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com