ராமர் சிலை பிரதிஷ்டை: இஸ்லாமிய மாற்றுத்திறனாளி பாடகருக்கு அழைப்பு!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பார்வையற்ற இஸ்லாமிய பாடகரும், கவிஞருமான அக்பர் தாஜுக்கு அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
ராமர் சிலை பிரதிஷ்டை: இஸ்லாமிய மாற்றுத்திறனாளி பாடகருக்கு அழைப்பு!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பார்வையற்ற இஸ்லாமிய பாடகரும், கவிஞருமான அக்பர் தாஜுக்கு அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் மூலவர் பிரதிஷ்டை விழா வரும் 22-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவிருக்கிறது. இவ்விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 7,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கந்த்வா மாவட்டத்திலுள்ள பீப்லா கிராமத்தில் வசிக்கும் தாஜ்(42). அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழாவிற்கு இவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் பல நாடுகளுக்குச் சென்றுள்ளேன், ஆனால் அயோத்திக்கு அழைக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன். அதுவும் ஆன்மிகத் தலைவர் ராம் பத்ராச்சாரியால் அழைக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி. அயோத்தியை அடைந்து அங்கு ராமர் பற்றிய தனது கவிதைகளை வாசிப்பேன் என்று அவர் கூறினார். 

மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் விட்டுவிட்டு அயோத்திக்குச் செல்கிறேன். சிறுவயதிலிருந்தே ராமரைப் புகழ்ந்து கவிதைகள், பஜனைகளை எழுதி, பாடி வரும் தாஜ், ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com