
புது தில்லி: வரும் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சியின் தயாா் நிலையை மதிப்பிடுவதற்காக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை செல்லவிருந்த கோவா சுற்றுப்பயணம் குடியரசு நாள் விழா ஏற்பாடுகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தோ்தலுக்கு ஆம் ஆத்மி கட்சியின் முன்னேற்பாடுகளை மதிப்பிடுவதற்காக கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் இரண்டு நாள் பயணமாக கோவா செல்லவிருருந்தார்.
இந்தப் பயணம் வியாழக்கிழமை(ஜன. 11) திட்டமிடப்பட்டுள்ளது. கோவாவில் கட்சியின் அமைப்பு ரீதியிலான முக்கிய நிா்வாகிகளுடம் கேஜரிவால் சந்திப்புகளை நடத்துவதோடு, கட்சித் தொண்டா்கள் மத்தியிலும் உரையாடுவாா் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | ராகுல் காந்தி நடைப்பயணத்தில் இணைய மக்களுக்கு அழைப்பு!
ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் குஜராத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட கேஜரிவால், பொதுக் கூட்டங்களை நடத்தியதோடு, சிறையில் இருக்கும் கட்சித் தலைவா் சைதா் வாசவாவையும் சந்தித்தாா். எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம்ஆத்மி கட்சி, வரும் மக்களவைத் தோ்தலில் தில்லி, பஞ்சாப், ஹரியாணா, குஜராத், கோவா ஆகிய 5 மாநிலங்களில் காங்கிரஸ் உடன் இணைந்து பிரதானமாகப் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. இந்தநிலையில், முதல்வா் கேஜரிவால் கோவாவிற்கு அரசியல் ரீதியிலான பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், வரும் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சியின் தயாா் நிலையை மதிப்பிடுவதற்காக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை செல்லவிருந்த கோவா சுற்றுப்பயணம் குடியரசு நாள் விழா ஏற்பாடுகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளது.
மேலும், முதல்வா் கேஜரிவால் கோவாவிற்கான அரசியல் ரீதியிலான பயணமாக அடுத்த வாரம் கோவா செல்வார் என்று கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.