டிவி நேரலையில் மயங்கி விழுந்த வேளாண் நிபுணர் பலி

தொலைக்காட்சி நேரலையில் பங்கேற்றிருந்த வேளாண் நிபுணர் அனி எஸ் தாஸ் (59) மயங்கி விழுந்து பலியானார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடந்த நேரலையில் பங்கேற்றிருந்த வேளாண் நிபுணர் அனி எஸ் தாஸ் (59) மயங்கி விழுந்து பலியானார்.

கிரிஷி தர்ஷன் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது, திடீரென மயங்கி விழுந்த அனி தாஸ் அருகில் உள்ள திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

கேரள மாநிலத்தில், கேரள தீவன நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும், கேரள வேளாண்மை பல்கலைக்கழக தொடர்பு மையத்தின் தலைவராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் 2012ஆம் ஆண்டு இந்திரா பிரியதர்ஷினி விருது மற்றும் 2009ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி ஷிரோமணி விருதுகளை பெற்றவர். இறைச்சிப் பொருள் தயாரிப்பில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் கொல்லம் மாவட்டம் கடக்கல் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் கால்நடை மருத்துவர் என்றும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com