ஏஐ ஆபத்தானது.. சச்சினின் விடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

சச்சின் டெண்டுல்கரின் போலி விடியோ வைலராகி வருகிறது.
ஏஐ ஆபத்தானது.. சச்சினின் விடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

செயற்கை நுண்ணறிவு வளா்ச்சியின் ஒரு பகுதியாக ‘டீப் ஃபேக்’ (Deep Fake) தொழில்நுட்பம் உள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் ஒருவா் பேசும் உண்மையான ஆடியோ, விடியோ, புகைப்படங்கள் போன்று மற்றொரு நபா் மூலம் போலியான ஆடியோ, விடியோ, புகைப்படங்களை உருவாக்க முடியும். 

அதாவது ஒருவரது உருவத்தையும், குரலையும் பயன்படுத்தி மற்றொருவா் நடித்து அவரை போன்ற விடியோவையோ, ஆடியோவையோ உருவாக்க முடியும்.

டீப்ஃபேக்கில்  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, கஜோல், பிரியங்கா சோப்ரா, ரத்தன் டாடா ஆகியோரின் போலி காணொலிகள் இணையத்தில் வைரலானது.  

இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கேமிங் செயலி ஒன்றை விளம்பரப்படுத்தும் விடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசல் சச்சினின் தோற்றம் மற்றும் குரலுடன் வெளியாகியுள்ள இந்த விடியோ டீப் ஃபேப் மீதான அச்சத்தை அதிகரிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com