வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பிரதமர் மோடி வழிபட்ட லேபாக்‏ஷி கோயிலின் சிறப்பம்சம்

பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தியில் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, ஆந்திர மாநிலத்தில் ராமாயணத்துடன் தொடர்புடைய லேபாக்‏ஷி கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.

News image
Updated On :16 ஜனவரி 2024, 11:44 am

பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தியில் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, ஆந்திர மாநிலத்தில் ராமாயணத்துடன் தொடர்புடைய லேபாக்‏ஷி கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.

லேபாக்‏ஷி கோயிலானது, ராமருடன் வனவாசத்தில் இருந்த சீதா தேவியை, ராவணன் கடத்திச் சென்றபோது ஜடாயு என்ற மாபெரும் கழுகு பின் தொடர்ந்து சென்ற தலம் லேபாக்‏ஷி என்று நம்பப்படுகிறது.

இறக்கும் நிலையில் இருந்த ஜடாயு, சீதா தேவி சிறைப்பிடிக்கப்பட்டதைப் பற்றிய முக்கியமான தகவல்களைத் தெரிவித்ததால், லேபாக்‏ஷியில் ராமரால் தெய்வீக விடுதலையான 'மோட்சம்' அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

அயோத்தியில் ஜனவரி 22ஆம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடைபெறவிருக்கும் நிலையில், தென் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக ஆந்திரா மற்றும் கேரளம் செல்லும் பிரதமர் மோடி, ஆந்திரத்தில் இன்று பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.  லேபாக்‏ஷி கோயிலுக்கு வந்த பிரதமர் மோடி அங்கு சிறப்பு வழிபாடு செய்தார். பின்னர் அவர் கேரளம் சென்று குருவாயூர் உள்ளிட்ட கோயில்களுக்கும் செல்லவிருக்கிறார்.

அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.