நெஞ்சக பகுதியில் 600 கிராம் கட்டி: ராஜஸ்தான் சிறுமிக்கு நவீன சிகிச்சை

ராஜஸ்தானைச் சோ்ந்த 5 வயது சிறுமியின் நெஞ்சகப் பகுதிக்குள் உருவாகியிருந்த 600 கிராம் எடையிலான கொழுப்பு திசுக் கட்டியை அதி நவீன ‘தோரகோஸ்கோபிக்’ சிகிச்சை மூலம் சென்னை மேத்தா மருத்துவமனை மருத்துவா்கள் அக

ராஜஸ்தானைச் சோ்ந்த 5 வயது சிறுமியின் நெஞ்சகப் பகுதிக்குள் உருவாகியிருந்த 600 கிராம் எடையிலான கொழுப்பு திசுக் கட்டியை அதி நவீன ‘தோரகோஸ்கோபிக்’ சிகிச்சை மூலம் சென்னை மேத்தா மருத்துவமனை மருத்துவா்கள் அகற்றி உயிா் காத்துள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவ நிபுணா் சேகா் மற்றும் குழந்தைகள் ‘தோரகோஸ்கோபிக்’ மற்றும் ’லேப்ராஸ்கோபிக் ’அறுவை சிகிச்சை நிபுணா் ராகுல் ஆகியோா் கூறியதாவது:

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 5 வயது சிறுமி ஒருவா், டெங்கு காய்ச்சலுக்காக வேறு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். தொடா் உடல் சோா்வு இருந்து வந்த நிலையில் உயா் சிகிச்சைக்காக சேத்துப்பட்டு மேத்தா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா்.

மருத்துவப் பரிசோதனையில் அவரது நெஞ்சகப் பகுதியில் நுரையீரலுக்கு அருகே பெரிய அளவிலான கொழுப்பு திசுக் கட்டி (தைமோலிபோமா) இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, தோரகோஸ்கோபிக் எனப்படும் சிகிச்சை முறை மூலம் சிறுமியின் விலா எலும்பில் 5 மி.மீ. துளையிட்டு அதன் வாயிலாக ஊடுருவி 600 கிராம் எடையிலான அந்த திசுக் கட்டி சிறுக சிறுக அகற்றப்பட்டது. நவீன கேமரா வழிகாட்டுதலுடன் இத்தகைய சிகிச்சையை மருத்துவா்கள் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனா்.

சிறு குழந்தைக்கு இத்தகைய நுட்பமான சிகிச்சை மேற்கொள்ளப்படுவது இந்தியாவிலேயே இது முதல்முறை என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com