அசாமில் ஊழல் நிறைந்த ஆட்சி நடைபெறுகிறது: ராகுல்!

அசாமில் ஊழல் நிறைந்த அரசு நடைபெறுவதாகக் காங்கிரஸ் எம்.பி ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். 
அசாமில் ஊழல் நிறைந்த ஆட்சி நடைபெறுகிறது: ராகுல்!

அசாமில் ஊழல் நிறைந்த அரசு ஆட்சி நடத்துகிறது. டைபெறுவதாகக் காங்கிரஸ் எம்.பி ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். 

ராகுல் காந்தி கடந்த ஜன.14-ம் தேதி மணிப்பூரில் காங்கிரஸின் பாரத் ஜோடா நியாய யாத்திரையைத் தொடங்கினார். யாத்திரையின் ஐந்தாவது நாளாக நாகாலாந்தின் தூலியிலிருந்து அசாமில் உள்ள ஜோர்ஹாட் வரை மீண்டும் தொடங்கியது. அசாமில் உள்ள சிவசாகரில் யாத்திரைக்கு முன்னதாக கொடி ஒப்படைப்பு  விழா நடைபெற்றது. 

அப்போது அவர் பேசியது, நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக-ஆர்எஸ்எஸ் அநீதி இழைத்து வருகிறது. மணிப்பூரில் உள்நாட்டுப் போர் சூழல் நிலவுகிறது. இதுநாள் வரை பிரதமர் மோடி அந்த மாநிலத்துக்குச் செல்லவில்லை. ஆனால், நாகாலாந்தில் பெரிய வாக்குறுதிகள், 9  ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தம் என்ன ஆனது என்று நாகாலாந்து மக்கள் கேட்கிறார்கள்? 

இந்தியாவின் ஊழல் நிறைந்த அரசாங்கம் அசாமில் நடைபெறுகிறது. நாகாலாந்தில் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, அசாமிலும் நாங்கள் அதைப் பெறுவோம் என்று நம்புகிறேன். அனைவரையும் ஒன்றிணைக்கவே இந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com