தேஜஸ்வி யாதவ், லாலு பிரசாத் யாதவ் (கோப்புப்படம்)
தேஜஸ்வி யாதவ், லாலு பிரசாத் யாதவ் (கோப்புப்படம்)

லாலு மற்றும் தேஜஸ்வி யாதவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை!

ரயில்வே வேலைக்கு லஞ்சம் பெற்றதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து விசாரிக்க லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
Published on

ரயில்வே வேலைக்கு லஞ்சம் பெற்றதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து விசாரிக்க லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தாா். அப்போது பாட்னாவைச் சோ்ந்த சிலரை ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் நியமிக்க, அவா்களுக்கு சொந்தமான நிலத்தை லஞ்சமாக குறைந்த விலைக்குப் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அவர்களுக்கு சொந்தமான நிலத்தை சந்தை மதிப்பைவிட குறைந்த விலைக்கு லாலு குடும்பத்தினா் நேரடியாக வாங்கியுள்ளனா் என்று சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடா்பாக சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஜன.29ம் தேதியும், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஜன.30-ஆம் தேதியும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த டிசம்பர் மாத இறுதியில் இருவருக்கும் அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது. ஆனால் அப்போது அவர்கள் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. 

முன்னதாக இந்த வழக்கில் தேஜஸ்வி யாதவிடம் 2023 ஏப்ரல் 11 ஆம் தேதி சுமார் எட்டு மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

இந்த விவகாரத்தில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தின் நெருங்கிய நண்பரான அமித் கத்யால் கடந்த நவம்பர் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com