தொடரும் சோகம்: 18 வயது உடற்பயிற்சியாளர் மாரடைப்பால் பலி

போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் ஆசிரியர்களின் உரையைக் கேட்டுக்கொண்டிருந்த 18 வயது உடற்பயிற்சியாளர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
தொடரும் சோகம்: 18 வயது உடற்பயிற்சியாளர் மாரடைப்பால் பலி


இந்தூர்: போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் ஆசிரியர்களின் உரையைக் கேட்டுக்கொண்டிருந்த 18 வயது உடற்பயிற்சியாளர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், இத்தனை தொழில்நுட்பங்களும் வளர்ந்துவிட்ட பிறகும், இதற்கான காரணங்கள் இதுவரைக் கண்டறியப்படாமல் இருப்பதுதான் பெருந்துயரமாக உள்ளது.

இதையும் படிக்க.. அயோத்தி ராமர் கோயிலில் மோடியின் பங்களிப்பு ஸீரோ:  சுப்ரமணியன் சுவாமி 

பயிற்சி மையத்தில இருந்த சிசிடிவி கேமராவில் மொத்த சம்பவமும் பதிவாகியிருக்கிறது. அதில், ராஜ் லோதி என்ற அந்த இளைஞர், பேராசிரியரின் உரையைக் கேட்டுக்கொண்டிருக்கும் போதே திடீரென தனது மேஜை மீது சரிந்து விழுகிறார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும், அவர் வரும் வழியிலேயே மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைகளைக் கட்டியவாறு அவர் பேராசிரியர்கள் பாடம் படத்துவதைக் கேட்டுக் கொண்டிருந்த அவர் திடீரென விழுகிறார். அவரது முகம் மேஜை மீது விழுகிறது. முதலில் அவர் தூங்கிவிட்டார் என்றுதான் பலரும் நினைத்தோம். ஆனால், அவரது முகப்பாவம் மாறுவதைக் கவனித்ததும் அவர் வலியால் துடிக்கிறார் என்பது தெரிந்தது.

உடனடியாக அவரது பின்பக்கம் தடவிவிட்டு தூக்க முயன்றோம். ஆனால், அவரது உடல் இறுகிவிட்டது. நாற்காலியிலிருந்து விழுந்துவிட்டார் என்றார் அவருடன் அமர்ந்திருந்த அவரது நண்பர்.

வெறும் 5 நிமிடங்களில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் கூட அவரை காப்பாற்ற முடியவில்லை.  அவரது உடல்கூறாய்வு முடிந்து பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது என்கிறார்கள் பயிற்சி நிர்வாகத்தினர்.

அவரது உடல் கூறாய்வில், அவர் மாரடைப்பால் பலியாகியிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிப்பதாகவும், முழுமையான அறிக்கை வந்தால்தான் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படும் என்றும் கூறப்படுகிறது.

அவர் தற்போது புரத உணவு முறையை மேற்கொண்டு வந்திருந்ததாகவும், தினமும் காலையில் 5 மணி முதல் அவர் உடற்பயிற்சிக் கூடத்தில் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வார் என்றும், தலைமுடி உதிர்வுக்கு சில மாத்திரைகளை அவர் சாப்பிட்டு வந்ததாகவும் இதைத் தவிர அவருக்கு வேறு எந்த நோயும் இல்லை என சகோதரர் கூறுகிறார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com