அயோத்தி ராமர் கோயிலில் மோடியின் பங்களிப்பு ஸீரோ:  சுப்ரமணியன் சுவாமி 

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கும் பிரதமர் மோடிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கருத்துத் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புது தில்லி: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கும் பிரதமர் மோடிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கருத்துத் தெரிவித்துள்ளார்.

இருக்கும் கட்சியில் இருந்துகொண்டே, கட்சியைப் பற்றியும், கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் விமரிசித்து வருபவர் சுப்ரமணியன் சுவாமி. இந்த நிலையில்தான், அயோத்தி ராமர் கோயிலில் சிலைப் பிரதிஷ்டையை மத்திய அரசு கோலாகலமாக நடத்த பல்வேறு ஏற்பாடுகளையும் செய்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கும் அயோத்தியில் ராமர் கோயிலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கருத்துக் கூறி பரபரப்பைக் கூட்டியிருக்கிறார் சுப்ரமணியன் சுவாமி.

இது குறித்து அவர் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, அயோத்தியில் ராமர் கோயிலை அவர்தான் கட்டியது போல பிரதமர் மோடி காட்டிக் கொள்வதாகவும் உண்மையில் இதில் மோடியின் பங்கீடு ஸீரோதான் என்றும் சுப்ரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

அதோடு நிற்காமல், பிரதமர் மோடி தனது தொகுதியான வாராணசியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் கோயில் கட்டுவதில் கவனம் செலுத்த  வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் வரும் 22-ஆம் தேதி மூலவா் சிலை பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளா்கள் பங்கேற்கவுள்ளனா்.

வரும் 22-ஆம் தேதி மதியம் 12.20 மணியளவில் தொடங்கும் பிரதிஷ்டை நிகழ்வு, 1 மணி வரை நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் மத்திய அரசு ஊழியர்கள் எவ்வித தடையும் இன்றி, கோயிலுக்கு வந்து இந்நிகழ்வில் பங்கேற்கும் வகையில், அன்றைய நாளில், நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com