பாஜக வாக்கு இயந்திரங்களுக்கு ஆதரவு அளிப்பது ஏன்? : பஞ்சாப் முதல்வர் கேள்வி

கோவாவில் பொதுக் கூட்டத்தில் பேசிய பஞ்சாப் முதல்வர் வாக்கு இயந்திரங்களுக்கு பாஜக ஆதரவளிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
கேஜரிவால் உடன் பகவந்த் மான்
கேஜரிவால் உடன் பகவந்த் மான்

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மத்தியில் ஆளும் பாஜக அரசு இவிஎம் வாக்கு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்த ஏன் பயப்படுகிறார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தெற்கு கோவாவில் பொது கூட்டத்தில் பேசிய பகவந்த் மான், தான் இவிஎம் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதைக் குறிப்பிட்டார்.

அவர், “இவிஎம்க்கு எதிராக எந்தக் கட்சி பேசினாலும் பாஜக ஏன் வாக்கு இயந்திரங்களுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். மோடியின் பிரபலத்தின் மீது நம்பிக்கை இருந்தால் வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்தட்டும். இது நான் சொல்வது அல்ல. பொது மக்கள் தெரிவிப்பது. கடவுள் பார்த்து கொண்டிருக்கிறார்” எனப் பேசியுள்ளார்.

மேலும், மத்திய அரசு அமலாக்கத்துறை அதிகாரிகளை வைத்து மிரட்டுவதாகவும் அமலாக்கத்துறையினருக்கும் ஆதாரங்கள் வேண்டியதில்லை, அவர்கள் மேலிடம் சொல்வதைக் கேட்கிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கேஜரிவால் மற்றும் பகவந்த் மான் வியாழக்கிழமை கோவாவிற்கு மூன்று நாள் பயணமாக வருகை தந்துள்ளனர்.

ஏப்ரல்/மே மாதத்தில் நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலுக்கான கட்சியின் ஆயத்தப் பணிகளை மேற்பார்வையிட அவர்கள் வருகை தந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com