உ.பி.யில் சிறுத்தை தாக்கியதில் 8 வயது சிறுமி பலி

உத்திர பிரதேசத்தில் தந்தையுடன் வயல்வெளியில் வேலைசெய்துகொண்டிருந்த போது சிறுத்தை தாக்கியதில் 8 வயது சிறுமி பலியானார்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

உத்திர பிரதேசத்தில் தந்தையுடன் வயல்வெளியில் வேலைசெய்துகொண்டிருந்த போது சிறுத்தை தாக்கியதில் 8 வயது சிறுமி பலியானார்.

உத்திர பிரதேச மாநிலம், அயோத்தியாபுர்வா கிராமத்தில் வசித்து வந்தவர் ஆயிஷா(8). இவர் நேற்று தனது தந்தையுடன் வயல்வெளியில் வேலைசெய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிறுத்தை சிறுமியை திடீரென தாக்கியது. சிறுமியின் அலறல் கேட்டு கிராம மக்கள் சத்தம் எழுப்பினர். 

இதனால் பயமுற்ற சிறுத்தை அங்கிருந்து தப்பித்தது. இருப்பினும் சிறுத்தை தாக்கியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர், சிறுமியின் சிதைந்த சடலத்தை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பலியான சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10,000 உடனடியாக வழங்கப்பட்டது. 

மனித - வனவிலங்கு மோதல் சம்பவங்களை தடுக்க, வனத்துறையினர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். வயல்வெளியில் வேலைசெய்துகொண்டிருந்த சிறுமி, சிறுத்தை தாக்கி பலியான சம்பவம் உத்திர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com