ஆம் ஆத்மியில் இருந்து விலகிய அசோக் தன்வார் பாஜகவில் இணைந்தார்!

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய அசோக் தன்வார் சனிக்கிழமை தில்லியில் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் பாஜக தேசியத் தலைவர் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். 
ஆம் ஆத்மியில் இருந்து விலகிய அசோக் தன்வார் பாஜகவில் இணைந்தார்!

புது தில்லி: காங்கிரஸுடன் கூட்டணி வைக்கும் ஆம் ஆத்மியின் முடிவை எதிர்த்து வியாழக்கிழமை ஆம் ஆத்மியில் இருந்து விலகிய அசோக் தன்வார் சனிக்கிழமை தில்லியில் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் பாஜக தேசியத் தலைவர் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். 

காங்கிரஸுடன் கூட்டணி வைக்கும் ஆம் ஆத்மியின் முடிவை எதிர்த்து வியாழக்கிழமை ஆம் ஆத்மியில் இருந்து விலகிய தன்வார், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கு அனுப்பிய கடிதத்தில், "தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் இந்திய தேசிய காங்கிரஸுடனான உங்கள் கூட்டணியின் பார்வையில், ஆம் ஆத்மி கட்சியின் ஹரியாணாவின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராகத் தொடர எனது நெறிமுறைகள் என்னை அனுமதிக்காது. எனவே, ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட மற்ற அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நான் விலகிக்கொள்கிறேன். 

மேலும், இந்த நாட்டின் பொறுப்புள்ள குடிமகனாகவும், மாணவப் பருவத்திலிருந்தே தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்ததாகவும், அரசியல் சாசனம், நாடு மற்றும் மக்களை முதன்மையாக நம்புவதாக தெரிவித்துள்ளார். 

"ஹரியாணா மாநிலம், பாரதம் மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக நான் தொடர்ந்து பாடுபடுவேன்" என்று அவர் மேலும் கூறினார்.

2019 இல் காங்கிரஸில் இருந்து வெளியேறிய தன்வார், 2022 இல் ஆம் ஆத்மியில் சேர்ந்தார்.

முன்னதாக, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர், சிறிது காலம்  திரிணமூல் காங்கிரசில் இணைந்து பணியாற்றினார். 

சண்டிகர் மேயர் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன. மேயர் பதவிக்கு ஆம் ஆத்மி கட்சியும், மூத்த துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில், அசோக் தன்வார் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்திருப்பது பாஜகவுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என நம்பப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com