அருணாசலில் நுழைந்தது ராகுல் காந்தியின் நடைப்பயணம்

அசாமில் இருந்து ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸின் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’ சனிக்கிழமை அருணாசலில் நுழைந்தது.
அருணாசலில் நுழைந்தது ராகுல் காந்தியின் நடைப்பயணம்

அசாமில் இருந்து ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸின் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’ சனிக்கிழமை அருணாசலில் நுழைந்தது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சியின் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’ மணிப்பூரில் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 6,713 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட உள்ள இந்தப் பயணம், 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக 67 நாள்கள் நடைபெற உள்ளது. 

மாா்ச் 20 அல்லது 21-ஆம் தேதி மும்பையில் பயணம் நிறைவடைய உள்ளது.

இந்த நிலையில் அசாமில் இருந்து ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸின் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’ சனிக்கிழமை அருணாசலில் நுழைந்தது. அப்போது பபும் பரே மாவட்டத்தில் உள்ள கும்டோ சோதனை வாயிலில் ராகுலை, அருணாச்சல பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் நபம் துகி வரவேற்றார்.

தொடர்ந்து துகி மற்றும் அசாம் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் பூபென் போரா ஆகியோருக்கு இடையே இரு மாநில மூத்த தலைவர்கள் முன்னிலையில் கொடி ஒப்படைப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, மக்கள் அளித்த அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர் பாரம்பரியமிக்க நிஷி தலைப்பாகையுடன் டோய்முக் நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com