பாஜகவில் இணைகிறாரா அசோக் தன்வார்?

முன்னாள் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வார் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவில் இணைகிறாரா அசோக் தன்வார்?

முன்னாள் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வார், சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில் ஹரியாணாவைச் சேர்ந்த இவர் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அசோக் தன்வாரை இணைப்பதன் மூலம் மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக தனது செல்வாக்கை தலித் மக்களிடம் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

தன்வார் 2019-ல் காங்கிரஸில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு சிறிது காலம் திரிணமூல் உடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் 2022-ல் ஆம் ஆத்மியில் இணைந்தார்.

பாஜக வட்டாரங்கள் தன்வார் கட்சியில் இணையவுள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளன.

காங்கிரஸுடன் கூட்டணி வைக்கும் ஆம் ஆத்மியின் முடிவை எதிர்த்து வியாழக்கிழமை ஆம் ஆத்மியில் இருந்து தன்வார் விலகினார்.

2014 முதல் ஹரியாணாவில் ஆட்சியில் இருக்கும் பாஜக தன்வாரின் இணைவு கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என நம்புகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com