50 இசைக் கருவிகளுடன் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி

ராமா் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவில் நாட்டின் 50 பாரம்பரிய இசைக் கருவிகளுடன் பிரம்மாண்ட மங்கள இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
50 இசைக் கருவிகளுடன் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி
Updated on
1 min read

ராமா் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவில் நாட்டின் 50 பாரம்பரிய இசைக் கருவிகளுடன் பிரம்மாண்ட மங்கள இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீ பால ராமா் சிலை பிரதிஷ்டை திங்கள்கிழமை நடைபெறுகிறது. விழா தொடங்கப்படுவதற்கு 2 மணி நேரம் முன்பு காலை 10 மணியளவில், இந்திய பாரம்பரிய இசை வாத்தியங்களுடன் மங்கள இசை நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் இருந்து இசைக் கலைஞா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தமிழகத்தின் நாகஸ்வரம்-மிருதங்கம், கா்நாடகத்தின் வீணை, ஆந்திரத்தின் கடம், உத்தர பிரதேசத்தின் புல்லாங்குழல்-டோலக், மகாராஷ்டிரத்தின் சுந்தரி இசைக் கருவி, பஞ்சாபின் அல்கோஸா, ஒடிஸாவின் மா்தலா, மத்திய பிரதேசத்தின் சந்தூா், மணிப்பூரின் புங், சத்தீஸ்கரின் தம்பூரா, பிகாரின் பகாவஜ், ராஜஸ்தானின் ராவணஹதா, மேற்கு வங்கத்தின் ஸ்ரீகோல் மற்றும் சரோட், ஜாா்க்கண்டின் சிதாா் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களைச் சோ்ந்த 50 பாரம்பரிய இசை வாத்திய கலைஞா்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனா்.

தில்லி, சங்கீத நாடக அகாதெமியுடன் சோ்ந்து அயோத்தியின் புகழ்பெற்ற கவிஞா் யதீந்திர மிஸ்ரா இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளாா். காலை 10 மணிக்குத் தொடங்கி பிரதிஷ்டை விழா தொடங்கும் வரையில் சுமாா் 2 மணி நேரத்துக்கு மங்கள இசை நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராம பாதை மற்றும் தா்ம பாதை சந்திக்கும் லதா மங்கேஷ்கா் சௌக் பகுதியில், பிரம்மாண்ட வீணை சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ராமா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் இந்த வீணை சிலையின் முன்பு நின்று குழு குழுவாக தற்படம் எடுத்துக் கொள்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com