மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, உத்தர பிரதேசத்தில் புதிதாக 100 உயிரி எரிவாயு (பயோகேஸ்) உற்பத்தி நிலையங்கள் அமைக்கவிருப்பதாக தெரிவித்தார்.
லக்னோவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த ஏழு ஆண்டுகளாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்வதாகவும் ஒவ்வொரு துறையிலும் சிறப்பான பணிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
புடாவுனில் அமைக்கப்பட்ட பயோகேஸ் எனப்படும் சிபிஜி உற்பத்தி நிலையத்தைத் திறந்து வைப்பதற்காக புறப்பட்ட அமைச்சர், எட்டு மாவட்டங்களில் உற்பத்தி நிலையங்கள் அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளதைக் குறிப்பிட்டார்.
37 உற்பத்தி நிலையங்களுக்கான இடத்தேர்வு நிறைவடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் ‘வீணானவற்றை வளமாக்கும்’ இலக்கின் பகுதியாக இந்த உயிரி எரிவாயு திட்டம் இருக்கும் என முன்பு ஹர்தீப் தெரிவித்தார்.
தில்லியின் மாசு கட்டுபாட்டுக்கு மட்டுமல்ல விவசாயிகளின் வருமான அதிகரிப்புக்கும் பயோகேஸ் உதவும் என குறிப்பிட்டார்.
புடாவுன் உற்பத்தி நிலையம் 50 ஏக்கரில் ரூ.135 கோடி செலவில் அமைந்துள்ளது. இதன் மூலம் 14 டன் அளவுக்கு அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுவை நாள்தோறும் உற்பத்தி செய்ய இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அரையிறுதியில் ககிசோ ரபாடா தாக்கத்தை ஏற்படுத்துவார்; டெம்பா பவுமா நம்பிக்கை!

பிரதமர் மோடியின் தமிழ்ப் பற்றை தமிழக மக்கள் நன்கறிவார்கள்! - இபிஎஸ்

ஹார்ட் பீட் நாயகியின் கொலைச்சேவல் வெளியீட்டுத் தேதி!

தோனிக்கு ரூ. 1,000 அபராதம் விதித்த காவல்துறை!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

