வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஃபரித்பூரில் உள்ள வாடகை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானதாக அம்மாநில போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | பச்சோந்திகளுக்கே போட்டி நிதீஷ்குமார்: காங்கிரஸ் தலைவர்
இந்த தீ விபத்து சம்பவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை அந்த வீட்டில் இருந்து புகை வெளியேறுவதைக் கண்ட அண்டை வீட்டார் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் போலீஸார் அங்கு விரைந்து சென்றனர்
இந்த விபத்து குறித்து மூத்த காவல் கண்காணிப்பாளர் சுஷில் சந்திர துலே கூறியதாவது, “தீயை அணைத்தபின், காவலர் குழு வீட்டிற்குள் நுழைந்து பார்த்தபோது, ஐந்து உடல்கள் எரிந்த நிலையில் கிடந்தன.
அவர்கள் அஜய் குப்தா (38), அவரது மனைவி அனிதா (36), அவர்களின் மகன்கள் திவ்யான்ஷ் (9), தக்ஷ் (3) மற்றும் மகள் திவ்யங்கா (6) என அடையாளம் காணப்பட்டனர்.” என்று கூறினார்.
மேலும் இதுகுறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும், தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பதை அறிய போலீசார் முயன்று வருவதாகவும் எஸ்எஸ்பி தெரிவித்தார்.
இதையும் படிக்க | அரசியல் சந்தர்ப்பவாதி நிதீஷ் குமார்: பாஜக மூத்த தலைவர் விமர்சனம்!
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும் தகனம் செய்வதற்கான அனைத்து செலவையும் அரசே ஏற்கும் என்று மாவட்ட ஆட்சியர் ரவீந்திர குமார் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


