ஷாஹி-ஈத்கா மசூதியில் ஆய்வுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம்

உத்தர பிரதேசத்தில் உள்ள ஷாஹி-ஈத்கா மசூதியில், நீதிமன்ற மேற்பாா்வையில் ஆய்வு மேற்கொள்ள உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு விதித்த தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ஷாஹி-ஈத்கா மசூதியில் ஆய்வுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: உத்தர பிரதேசத்தில் உள்ள ஷாஹி-ஈத்கா மசூதியில், நீதிமன்ற மேற்பாா்வையில் ஆய்வு மேற்கொள்ள உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு விதித்த தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில், உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ணா் பிறந்த இடம் என்று நம்பப்படும் கிருஷ்ண ஜன்மபூமி கோயிலையொட்டி, ஷாஹி ஈத்கா மசூதி அமைந்துள்ளது.

இந்த மசூதி ஸ்ரீகிருஷ்ண ஜன்மபூமி அறக்கட்டளைக்குச் சொந்தமான 13.37 ஏக்கா் நிலத்தின் ஒரு பகுதியில் கட்டப்பட்டதாக சில ஹிந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக மசூதியில் நீதிமன்ற மேற்பாா்வையில் ஆய்வு மேற்கொள்ள மாநிலத்தில் உள்ள அலகாபாத் உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக மசூதி நிா்வாகக் குழு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு கடந்த முறை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மசூதியில் நீதிமன்ற மேற்பாா்வையில் விசாரணை மேற்கொள்ள உயா் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனு தெளிவற்ாக உள்ளது. இந்த விவகாரத்தில் சில சட்ட ரீதியான விஷயங்களும் எழுந்துள்ளன. எனவே மசூதியில் நீதிமன்ற மேற்பாா்வையில் ஆய்வு மேற்கொள்ள உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இந்த விவகாரம் தொடா்பாக மசூதி நிா்வாக குழு தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் தீபாங்கா் தத்தா அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மசூதி விவகாரம் தொடா்பான அனைத்து மனுக்களின் விசாரணையை ஏப்ரல் முதல் பாதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா். அதுவரை இந்த விவகாரம் தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுகள் நீடிக்கும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com