வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பட்ஜெட் கூட்டத்தொடரில் மதுரை எய்ம்ஸ் உள்பட 8 விவகாரங்களை எழுப்புவோம்: திமுக அறிவிப்பு

நாடாளுமன்றத்தின் இடைக்கால நிதிநிலை கூட்டத் தொடரில் இன்னும் கட்டி முடிக்கப்படாத மதுரை எய்ம்ஸ் உள்பட 8 விவகாரங்களை விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் திமுக முடிவு.

News image
Updated On :30 ஜனவரி 2024, 10:47 pm

புது தில்லி: நாடாளுமன்றத்தின் இடைக்கால நிதிநிலை கூட்டத் தொடரில் இன்னும் கட்டி முடிக்கப்படாத மதுரை எய்ம்ஸ் உள்பட 8 விதமான விவகாரங்களை விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை கோரப்பட்டது. 

17-ஆவது மக்களவையின் 15-ஆவது கூட்டத் தொடர் புதன்கிழமை (ஜன.31) தொடங்கி பிப்.9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கூட்டிய அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் திமுக சார்பில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை திமுக தலைவர் திருச்சி சிவா, அதிமுக சார்பில் தம்பிதுரை, மதிமுக பொதுச் செயலர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்தக் கூட்டத்தில் டி.ஆர். பாலு, திருச்சி சிவா ஆகியோர் பேசியதாவது:

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கும், அரசியல் சட்டத்துக்கும் புறம்பாக தமிழக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். இந்திய குடியுரிமைச் சட்டம் இஸ்லாமிய சமூகத்துக்கு எதிராக உள்ளது. இந்தச் சட்டத்தில் உள்ள குறிப்பிட்ட ஷரத்துகள் நீக்கப்பட வேண்டும். 

மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு கடந்த 2019-இல் பிரதமர் வந்து அடிக்கல் நாட்டிச் சென்றார். 5 ஆண்டுகளாகியும் எய்ம்ஸ் கட்டடம் கட்டி முடிக்கப்படவில்லை. மற்ற மாநிலங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஏன் கட்டி முடிக்கப்படவில்லை? இது போன்ற விவகாரங்கள் தொடர்பாக இந்தக் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும். இந்த 8-க்கும் மேற்பட்ட விவகாரங்களுக்கு நோட்டீஸ் கொடுக்க இருக்கிறோம். இந்த விவகாரங்களில் மத்திய அரசின் நிலை குறித்தும் அவையில் தெரிவிக்க வேண்டும் என திமுக சார்பில் கூட்டத்தில் கோரப்பட்டது. 

கூட்டத்தில் பேசிய ஜி.கே. வாசன், கடைசி கூட்டத்தொடர் என்பதால் அனைவருக்கும் வாய்ப்பளிக்கவேண்டும் என்றார். 

கூட்டத்துக்குப் பின்னர் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்தக் கூட்டத் தொடரில் 8 நாள் அமர்வுதான். ஆனால், முக்கியமானது. எனவே, மேற்கண்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.