
மாநிலத்தின் நிதி நிலைமை சரிவைச் சந்தித்து வருவதாகக் கூறி அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசுக்கு ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மேற்கு வங்க ஆளுநர் சந்தித்து வந்த மறு நாளில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
”மாநிலத்தின் நிதி நிலைமை அபாயகரமான நிலையில் உள்ளது. மேலும் பொது நிதி மேலாண்மை அரசு சார்பில் உள்ள குறைகளை வெளிப்படுத்துகிறது. மாநில அரசு நிதிச் சரிவை சந்தித்து வருவது அதிர்ச்சியாக உள்ளது” என்று ராஜ் பவன் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “பொருளாதாரத்தின் மந்தமான நிலையைக் கருத்தில் கொண்டு, அரசியலமைப்பின் 167 வது பிரிவின் கீழ் வரும் மேற்கு வங்கத்திற்கான வணிக விதிகளின் பிரிவு 30்-ன் படி, ஆளுநர் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி வைக்கப்பட்டுள்ளக் கோரிக்கையில், மாநிலத்தின் நிதி நிலை குறித்த விரிவான அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து, வெள்ளை அறிக்கை வெளியிட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.