
அயோத்தி உள்ள தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இரு முறை போட்டியிட முயற்சித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி பங்கேற்று மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.
அப்போது அயோத்தி குறித்து ராகுல் காந்தி பேசியதாவது:
“அயோத்தி கோயில் பாஜகவுக்கு பாடம் கற்பித்துக் கொடுத்துள்ளது. அயோத்தி விமான நிலையம் கட்டப்பட்ட இடம் வலுகட்டாயமாக கையகப்படுத்தப்பட்டது. அயோத்தி ஜென்மபூமி விழாவில் மக்கள் இல்லை. அம்பானியும், அதானியும்தான் இருந்தனர். பொதுமக்களுக்கு அழைப்பும் இல்லை, அவர்கள் வரவும் இல்லை.
அயோத்தி அமைந்துள்ள தொகுதியில் போட்டியிட பிரதமர் இரு முறை முயற்சித்தார். ஆனால், கணிப்பாளர்கள் வேண்டாம் என மோடியிடம் தெரிவித்துவிட்டனர்.” எனத் தெரிவித்தார்.
மேலும், பாஜகவின் கொள்கைகளாலும், அரசியலாலும் மணிப்பூரை எரித்துவிட்டனர். உள்நாட்டு போராக மாற்றியுள்ளனர். இதுவரை பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மணிப்பூர் மாநிலத்துக்கு செல்லவில்லை என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.