மகன் திருமணத்துக்கு முன்பு 50 இலவச திருமணங்களை நடத்தி வைத்த அம்பானி!

மகன் திருமணத்திற்கு முன் 50 ஏழை மணமக்களுக்கு திருமணம் நடத்தி அம்பானி குடும்பம் உதவியது
மணமக்களுடன் அம்பானி குடும்பத்தினர்
மணமக்களுடன் அம்பானி குடும்பத்தினர்PTI
Published on
Updated on
2 min read

அம்பானி மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் இணையருக்கான திருமண கொண்டாட்டத்தின் ஆரம்பமாக மகாராஷ்டிரம் பால்கர் பகுதியை சேர்ந்த ஏழை மணமக்கள் 50 பேருக்கு அம்பானி குடும்பத்தினர் திருமணம் நடத்தி வைத்தனர்.

ரிலையன்ஸ் கார்ப்பரேட் பூங்காவில் நடந்த இந்த நிகழ்வில் மணமக்களின் உறவினர்கள், சமூக பணியாளர்கள் உள்பட 800 பேர் பங்கேற்றனர்.

மணமக்கள்
மணமக்கள்PTI

அம்பானி தனது குடும்பத்தினருடன் திருமணத்துக்கு தலைமை தாங்கி நடத்திவைத்தார். மணமகன் மற்றும் மணமகளுக்கு தனிதனியாக பரிசுகள் அளிக்கப்பட்டன. தாலி, மண மோதிரம், மூக்குத்தி உள்பட தங்க ஆபரணங்கள், வெள்ளியில் மெட்டி மற்றும் கொலுசு மணமகளுக்கும் ரூ.1.01 லட்சம் மதிப்புள்ள காசோலை மணமகனுக்கும் தரப்பட்டது.

அம்பானி குடும்பத்தினர்
அம்பானி குடும்பத்தினர்PTI

கூடுதலாக திருமண சீர்வரிசையாக வீட்டு உபயோக பொருள்கள், ஓர் ஆண்டுக்கு தேவையாள மளிகை பொருள்கள் ஆகியவை கொடுக்கப்பட்டன. திருமணத்திற்கு பிறகு பிரம்மாண்டமான விருந்தும் நடைபெற்றது.

சடங்குகள் மேற்கொள்ளும் மணமக்கள்
சடங்குகள் மேற்கொள்ளும் மணமக்கள்PTI

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீடா அம்பானி, புதிதாக திருமணம் ஆன இணையர்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இவர்களை வாழ்த்துகிறேன். ஆனந்த் மற்றும் ராதிகா திருமண நிகழ்வுகள் இன்றைய திருமண நிகழ்வோடு சுப லக்னத்தில் தொடங்குகிறது எனத் தெரிவித்துள்ளார்.

நீடா அம்பானி மணமகள் ஒருவரிடம் பேசும்போது
நீடா அம்பானி மணமகள் ஒருவரிடம் பேசும்போதுPTI

முகேஷ் அம்பானி, நீடா அம்பானி இணையர்களின் மகன் ஆகாஷ் அம்பானி அவரது மனைவி சோல்கா மெத்தா மற்றும் மகள் இஷா அம்பானி அவரது கணவர் ஆனந்த் பிராமல் ஆகியோரும் உடனிருந்தனர்.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை 12 மும்பையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com