
மத்தியப் பிரதேசத்தில் நாளை 22 மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாநிலங்களி்லும் கனமழை பெய்து வருகின்றது. கடந்தவாரம் தில்லியில் பெய்த கனமழையால் தலைநகர் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.
இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் நாளை 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்...
தற்போது மாநிலத்தில் வெப்பநிலை குறைந்துள்ளதாகவும், மாநிலம் முழுவதும் 30 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி, அதே நிலையில் நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 3ல் மாநிலத்தில் 64.5 மிமீ முதல் 115.5 மி.மீ வரை மழைப் பதிவாக்கக்கூடிய 22 மாவட்டங்களில் கனமழை எச்சரக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெதுல், பந்தூர்னா, சியோனி மற்றும் தெற்கு பலகாட் மாவட்டங்களில் மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதேபோல், கந்த்வா, ஷாஜாபூர், நர்மதாபுரம், தேவாஸ், தார், இந்தூர், கர்கோன், புர்ஹான்பூர், பர்வானி, மாண்ட்லா மற்றும் தெற்கு ஜபல்பூர் மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.