அரசு அலுவலகத்தில் ரீல் : 8 ஊழியர்களுக்கு நிர்வாகம் நோட்டீஸ்!

அரசு அலுவலகத்தில் ரீல் செய்த ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்!
விடியோ காட்சி
விடியோ காட்சி
Published on
Updated on
1 min read

ரீல் எனப்படும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான காணொலி மீதான மோகம் கட்டுகடங்காததாக மாறி வருகிறது.

மக்கள் சாலைகளில், பேருந்துகளில் பயணிக்கும்போது பார்ப்பதை தாண்டி ரீல் எடுக்கவும் செய்கிறார்கள். அவ்வாறு அலுவலகத்தில் ரீல் பதிவு செய்த ஊழியர்களுக்கு கேரள நகராட்சி நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் திருவல்லா நகராட்சி ஊழியர்கள் எட்டு பேருக்கு, அவர்களது ரீல் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து விளக்கம் கேட்டு நகராட்சி செயலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அலுவலகத்தில் எடுக்கப்பட்ட அந்த விடியோவில் ஊழியர்கள் ஆடி பாடுவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

புதன்கிழமை நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்று நாள்களுக்குள் விளக்கமளிக்குமாறு அந்த நோட்டீஸில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய ஊழியர்கள், அலுவலகம் செயல்படாத நேரத்தில் இந்த விடியோ எடுத்ததாகவும் அலுவலகங்களுக்கு வருகிற மக்கள் யாருக்கும் தொந்தரவு தராத வகையில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

இது தீங்கிழைக்கக் கூடிய விஷயம் இல்லை என்பதால் ஊழியர்கள் தங்கள் மீது பெரிதாக நடவடிக்கை இருக்காது என எதிர்பார்த்துள்ளனர்.

நகராட்சி செயலரின் கவனத்துக்கு இந்த விடியோ வந்ததையடுத்து தனது கடமையை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com