
பாலியல் விடியோ வழக்கில் முதன்மை குற்றவாளியான பிரஜ்வல் ரேவண்ணாவை பெங்களூரு நகர்ப்புறத்திலுள்ள மத்திய சிறையில் அவரது தந்தையும் மத சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏவுமான ஹெச்.டி.ரேவண்ணா புதன்கிழமை சந்தித்தார்.
முன்னாள் எம்பியும் பிரதமர் ஹெ.டி.தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் கைதான பிறகு அவரை ரேவண்ணா முதன்முறையாக சந்தித்துள்ளார்.
சிறை செல்லும் சாலையில் அவரது வாகனம் நுழையும்போது ஹெச்.டி.ரேவண்ணா செய்தியாளர்களிடம் கடுமை காட்டினார். மத்திய சிறையில் தனிப்பகுதியில் சிறை வைக்கப்பட்டுள்ள பிரஜ்வலை செவ்வாய்க்கிழமை அவரது தாயார் பவானி சென்று சந்தித்தார்.
செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ரேவண்ணா தான் தனது மகனை சென்று சந்திக்கப் போவதில்லை எனத் தெரிவித்தார். அதற்கு மாறாக புதன்கிழமை சிறைக்கு சென்றுள்ளார்.
ஹெச்டி.ரேவண்ணா முன்னதாக பேசும்போது, கடவுள் மட்டுமே எங்களுடன் உள்ளார். வேறு யார் இருக்கிறார்? எனது மனைவி பிரஜ்வலை சென்று சந்தித்து வந்தார். யாருக்கு தெரியும் மகனும் தாயும் என்ன பேசிக் கொண்டார்கள் என. நான் அதை பற்றி கேட்கவில்லை எனத் தெரிவித்தவர், இன்று சிறையில் சந்தித்தபோது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.