ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்!

முதல்வராக மீண்டும் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்.
ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் ஆட்சி அமைக்க உரிமைகோரினார் ஹேமந்த் சோரன்
ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் ஆட்சி அமைக்க உரிமைகோரினார் ஹேமந்த் சோரன் ஏஎன்ஐ
Published on
Updated on
2 min read

ஜார்க்கண்ட் முதல்வராக மீண்டும் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன்.

தலைநகர் ராஞ்சியில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று (ஜூலை 3) மேற்கொண்ட ஆலோசனையில், மீண்டும் ஹேமந்த் சோரனை முதல்வராக்க முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, முதல்வராக இருந்த சம்பயி சோரன், தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார்.

ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம்  ராஜிநாமா கடிதம் வழங்கிய சம்பயி சோரன்
ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் ராஜிநாமா கடிதம் வழங்கிய சம்பயி சோரன்ஏஎன்ஐ

அப்போது செய்தியாளர்களுடன் பேசிய சம்பயி சோரன், ''கடந்த சில நாள்களுக்கு முன்பு நான் முதல்வராக தேர்வு செய்யப்பட்டதால், மாநில நிர்வாக பொறுப்புகளை கவனித்துவந்தேன். தற்போது ஹேமந்த் சோரன் திரும்ப வந்துள்ளதால், கூட்டணி கட்சிகள் பேசி இந்த முடிவை எடுத்துள்ளோம். ஜார்க்கண்ட் முதல்வராக மீண்டும் ஹேமந்த் சோரனை தேர்வு செய்துள்ளோம். இதனால், தற்போது முதல்வர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளேன்'' எனக் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஆளுநரிட உரிமை கோரி மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ஹேமந்த் சோரன், முதல்வர் சம்பயி சோரன் உங்களிடம் எல்லாவற்றையும் கூறியிருப்பார். இது தொடர்பாக விரிவாக பின்னர் பேசலாம். நாங்கள் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி செயல்படுகிறோம் எனக் குறிப்பிட்டுச் சென்றார்.

சம்பயி சோரனின் சகாப்தம் ஜார்க்கண்ட்டில் முடிந்துவிட்டதாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் தூபே இன்று விமர்சித்திருந்தார். இது தொடர்பாக சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர்,

ஜார்க்கண்ட்டில் சம்பயி சோரனின் சகாப்தம் முடிந்துவிட்டது. குடும்பக் கட்சியில் வெளிப்புற நபர்களுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை. பகவான் பிர்சா முண்டாடை உத்வேகமாகக் கொண்டு ஊழல்வாதி ஹேமந்த் சோரனுக்கு எதிராக முதல்வர் சம்பயி நிற்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் ஆட்சி அமைக்க உரிமைகோரினார் ஹேமந்த் சோரன்
காங்கிரஸில் இணைந்த பிஆர்எஸ் தலைவர்!

ஹேமந்த் சோரன் மாநில முதல்வராக இருந்தபோது ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் 8.5 ஏக்கா் நிலத்தைப் பெற போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக அவா் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இக்குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறையினர் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து சோரன் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்திருந்தார். அவருக்கு பதிலாக கட்சியின் மூத்த தலைவர் சம்பயி சோரன் முதல்வராக பொறுப்பேற்றிருந்தார்.

அண்மையில் நடந்த மக்களவைத் தோ்தலில் ஜாா்க்கண்டில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் பாஜக 8, ஜேஎம்எம் 3, காங்கிரஸ் 2, ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் ஓரிடத்திலும் வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com