இந்தியா
தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக ஐபிஎஸ் அதிகாரி ரவிசந்திரன் நியமனம்
தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக டி.வி.ரவிசந்திரன் நியமனம்
தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக மத்திய உளவுத்துறையின் சிறப்பு இயக்குநரும், 1990- தமிழகப் பிரிவைச் சோ்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான டி.வி.ரவிசந்திரனை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை நியமித்தது.
இதுதொடா்பாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில், ‘தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி டி.வி.ரவிசந்திரனை அடுத்த 2 ஆண்டுகளுக்கு நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதேபோல், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக இருந்த ராஜீந்தா் கன்னா தேசிய பாதுகாப்பு கூடுதல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.