15 நாள்களில் 9! நேற்று மட்டும் 3 பாலங்கள்! புதிய சாதனை படைக்கும் முன் முதல்வர் ஆலோசனை

பிகாரில் நேற்று ஒரே நாளில் 3 பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில், புதிய சாதனை படைக்கும் முன் முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
பிகாரில் தொடரும் சம்பவங்கள்
பிகாரில் தொடரும் சம்பவங்கள்
Published on
Updated on
1 min read

பாட்னா: புதன்கிழமை ஒரே நாளில் சிவான் பகுதியில் இரண்டும், சரண் மாவட்டத்தில் ஒரு பாலமும் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகி, கடந்த 15 நாள்களில் இடிந்து விழுந்த பாலங்களின் எண்ணிக்கை பிகாரில் 9 ஆக அதிகரித்துள்ளது.

இதுபோல, பாலங்கள் இடிந்து விழுவதும் நாள்தோறும் சாதனை படைத்து வரும் பிகார் மாநிலம், புதிய சாதனை ஏதேனும் படைத்துவிடும் முன், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எடுப்பது என்று முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், மாநிலம் ழுவதும் பாலங்களின் உறுதித் தன்மையை உறுதி செய்து, பழைய பாலங்களை சீரமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

நேற்று விழுந்த பாலங்களில் ஒன்று 1982-83ஆம் ஆண்டிலும், மற்றொன்று 1998ஆம் ஆண்டிலும் கட்டப்பட்டதாகும்.

கடந்த வாரம் பிகாரின் அராரியா மாவட்டத்தில் இரு பாலமும், ஸ்வான் மாவட்டத்தில் ஒரு பாலமும் இடிந்து விழுந்தன. இவை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த புதிய பாலங்கள் ஆகும். கட்டப்பட்டு வந்த பாலங்கள் இடிந்து விழுந்தது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அந்த அதிர்ச்சி விலகுவதற்குள், ‘பகதூா்கஞ்ச் வட்டத்தில் சிறிய துணை ஆறு ஒன்றின் குறுக்கே 70 மீட்டா் நீளம், 12 மீட்டா் அகலத்தில் கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்தது. இந்தப் பாலம் கடந்த 2011-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. நேபாளத்தில் ஆற்றின் நீா்ப்பிடிப்பு பகுதியில் மழை அதிகம் பெய்ததால் பாலத்தின் கீழே அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீரின் அளவு திடீரென வேகமாக அதிகரித்ததால் பாலத்தின் சில தூண்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், பாலம் அந்தரத்தில் தொங்கும் நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் யாரும் கவனக்குறைவாக பாலத்தில் கடந்து செல்ல முயற்சித்துவிடக் கூடாது என்பதற்காக இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக பிகாரில் இதுபோல பாலங்கள் இடிந்து விழும் நிகழ்வு தொடா்கதையாகி வருகிறது. தரமற்ற கட்டுமானம் காரணமாகவே இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவதாக அந்த மாநில பொதுப் பணித் துறை மீது பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்துள்ளனர்.

அவை மெய்தான் என்பதை நிரூபிக்கும் வகையில், பிகாரில் கடந்த 15 நாள்கள் 9 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. கடும் அதிர்ச்சி என்னவென்றால், நேற்று புதன்கிழமை ஒரே நாளில் 3 இடங்களில் பாலங்கள் விழுந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com