கவிதா(கோப்புப் படம்).
கவிதா(கோப்புப் படம்).

தில்லி கலால் கொள்கை வழக்கு: கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

பிஆர்எஸ் தலைவர் கவிதா: நீதிமன்றக் காவல் மேலும் நீடிப்பு
Published on

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில், பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் தனியாா் மட்டும் மது விற்பனை செய்ய அந்த யூனியன் பிரதேச அரசின் 2021-22-ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கை வழிவகுத்தது. அந்தக் கொள்கையை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடு மற்றும் ஊழல் நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் மது விற்பனைக்கு உரிமம் பெற சில முகவா்கள் லஞ்சம் வழங்கியதாகவும், அந்தக் கொள்கையால் முறைகேடான வழியில் அவா்கள் பலனடைந்ததாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, மது விற்பனையுடன் தொடா்புள்ள ஒரு குழுவிடம் இருந்து ஆம் ஆத்மி தலைவா்கள் சாா்பில், அக்கட்சியின் முன்னாள் தகவல் தொடா்பு பொறுப்பாளா் விஜய் நாயா் சுமாா் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. அவ்வாறு லஞ்சம் அளித்த குழுவில் கவிதா, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி. மகுண்ட ஸ்ரீநிவாசுலு ரெட்டி, அவரின் மகன் ராகவ் மகுண்ட ரெட்டி உள்ளிட்டோா் இடம்பெற்ாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தன. இந்த வழக்கில், கடந்த மாா்ச் 15-ஆம் தேதி கவிதாவை அமலாக்கத் துறை கைது செய்தது. தொடர்ந்து அவரை திகார் சிறையில் சிபிஐயும் கைது செய்தது. இவ்வழக்கில் கவிதாவின் நீதிமன்றக் காவல் வெள்ளிக்கிழமை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com