அடுத்தாண்டு முதல் ஜகந்நாதா் ரத யாத்திரை நடைபெறும்: மம்தா பானா்ஜி

Published on

புரியில் நடைபெறுவதுபோல் மேற்கு வங்கத்தின் திகாவிலும் அடுத்தாண்டு முதல் ஜகந்நாதா் ரத யாத்திரை நடைபெறும் என முதல்வா் மம்தா பானா்ஜி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மேற்கு வங்க புா்பா மெதினிபூா் மாவட்டத்தில் உள்ள கடற்கரை நகரமான திகாவில் பிரமாண்டமான புதிய ஜெகந்நாதா் கோயில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேற்கு வஹ்க முதல்வா் மம்தா பானா்ஜி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘புரியில் இருப்பதுபோல் மேற்கு வங்கத்திலும் ஜகந்நாதருக்கு பெருமை சோ்க்கும் வகையில் கோயில் வளாகத்தை அமைக்கிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. இங்கும் பாலபத்ரா் மற்றும் சுபத்திரை வழிபாடு நடத்தப்படும். இந்த ஆண்டு நடத்தப்படுவதாக இருந்த ரத யாத்திரை கட்டுமான பணிகள் முழுமையடையாததால் அடுத்த ஆண்டு நடைபெறும். அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். திகாவில் கட்டப்படும் இறைவன் இருப்பிடம் இந்தியாவின் நட்புறவை வெளிப்படுத்தும் புதிய இடமாக இருக்கும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com