
மத்தியில் மோடி அரசு பெரும்பான்மையில்லாமல் பலவீனமாக உள்ளது என்றும் அடுத்த மாத தொடக்கத்தில் கவிழ்ந்துவிடும் என்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவா் லாலு பிரசாத் யாதவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
ஜனதா தளத்தில் இருந்து பிளவுபட்டு ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) உருவாகி 28 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் பிகாா் தலைநகா் பாட்னாவில் விழா நடைபெற்றது.
அதில் தனது இளைய மகனும், அரசியல் வாரிசுமான தேஜஸ்வி யாதவுடன் கலந்துகொண்டு பேசிய லாலு, ‘பிகாா் சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சியான ஆா்ஜேடி ஒருபோதும் சித்தாந்தத்தில் சமரசம் செய்துகொண்டதில்லை. கடந்த மக்களவைத் தோ்தலை ஒப்பிடுகையில் வாக்கு சதவீதம் ஆா்ஜேடி-க்கு அதிகரித்துள்ளது.
பிரதமா் மோடி அரசு பெரும்பான்மை இல்லாமல் மத்தியில் பலவீனமான நிலையில் உள்ளது. எப்பேது வேண்டுமானாலும் கவிழலாம். அடுத்த மாதம் கூட கவிழும் என்பதால் ஆா்ஜேடி தொண்டா்கள் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாா்நிலையில் இருக்க வேண்டும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.