வலியை தாங்கும் வலிமையை கடவுள் தர வேண்டும்: போலே பாபா

ஹாத்ரஸ் சம்பவம் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு போலே பாபா அளித்த நேர்காணலில் வலியை தாங்கும் மனவலியை கடவுள் தர வேண்டும் என கூறியிருக்கிறார்.
பாபா ஆசிரமம்
பாபா ஆசிரமம்ANI
Published on
Updated on
1 min read

மணிப்புரி: ஹாத்ரஸ் கூட்ட நெரிசலில் 121 பேர் பலியான சம்பவத்தில் முதல் முறையாக தனது மௌனத்தைக் கலைத்து, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் தன்னைக் கடவுள் என்று கூறிக்கொள்ளும் சூரஞ்பால் சிங் எனப்படும் போலே பாபா, சனிக்கிழமை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், சத்சங் சொற்பொழிவு நிகழ்ச்சியில் நேரிட்ட சம்பவத்துக்கு தனது இரங்கலையும் ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

இது குறித்து ஏஎன்ஐயிடம் அவர் கூறியிருப்பதாவது, ஜூலை 2ஆம் தேதி நடந்த சம்பவத்தால் நான் மிகுந்த வருத்தமடைந்தேன். இந்த வலியைத் தாங்குவதற்கான சக்தியை அவர்களுக்கு கடவுள்தான் அளிக்க வேண்டும். உத்தரப்பிரதேச அரசு மற்றும் அதன் நிர்வாகத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். இந்த சம்பவத்துக்குக் காரணமாக சதிகாரர்கள் நிச்சயம் தப்பிக்க முடியாது என்று நான் நம்புகிறேன். எனது வழக்குரைஞர் மூலமாக, எங்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

ஹாத்ரஸ் சம்பவம் பற்றி பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின்படி, 80 ஆயிரம் பேர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி பெற்றுவிட்டு, 2,50,000 பேர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கியக் குற்றவாளி தேவ்பிரகாஷ் மதுகர், தில்லியில் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com