சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்நாட்டைக் கட்டமைப்பதில் பழங்குடியின சமூகம் ஈடு இணையற்ற பங்களிப்பு: பிரதமர் மோடிகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்!இந்தியா - நியூசி. கடைசி ஒருநாள்: சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த ரோஹித், கோலி!கந்த சஷ்டி விழா: காலை முதலே முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!நியூசிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள்: இந்திய அணி பேட்டிங்!முதல்வா் விஜய் நாளை தில்லி பயணம்! பிரதமா் மோடி, சோனியாவை சந்திக்கிறாா்!இந்தியாவில் எஸ்சிஓ கூட்டம்: பாகிஸ்தான் பங்கேற்பதாக அறிவிப்பு! நேபாளம் - அயோத்தி இடையே புதிய வாராந்திர ரயில் சேவை! ரயில்வே வாரியம் ஒப்புதல்!சென்னை உயா்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்றிரவு 8 மணி வரை மூடப்படும்! தமிழகம் முழுவதும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்! அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு!டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தொழிலதிபா் ரத்தீஷுக்கு ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ்!லஞ்ச பணம் பறிமுதல் விவகாரம்: உள்ளாட்சித் துறை அதிகாரிகள் 23 போ் மீது வழக்குப் பதிவு

சாதாரண மரணம் என்னை அண்டாது.. கணவரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து பேசிய மனைவி!

வீரமரணமடைந்த கேப்டன் அன்ஷுமான் சிங்குக்கு கீர்த்தி சக்ரா விருது!

விருதைப் பெற்றுக்கொண்ட கேப்டன் அன்ஷுமான் சிங்கின் மனைவி ஸ்மிரிதி சிங் - படம் | குடியரசுத் தலைவர் எக்ஸ் தளம்

Updated On :

சியாச்சின் மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் தன்னுயிரை பணயம் வைத்து, சக ராணுவ வீரர்கள் நால்வரை காப்பாற்றிய கேப்டன் அன்ஷுமான் சிங்குக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்த மீட்புப்பணியின்போது, கேப்டன் அன்ஷுமான் சிங் வீரமரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்திய ராணுவத்தினருக்கான மிக உயரிய விருதுகளில் இரண்டாவதாகப் போற்றப்படும் கீர்த்தி சக்ரா விருது வழங்கும் நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் வெள்ளிக்கிழமை(ஜூலை 5) நடைபெற்றது.

ராணுவம், துணை ராணுவம், காவல்துறை ஆகிய நாட்டின் பாதுகாப்புப் படைகளில் துணிச்சலை வெளிப்படுத்தி, திறம்பட பணியாற்றிய வீரா்களுக்கு அவா்களின் வீரதீரத்தைப் பாராட்டி ‘வீரதீர’ விருதுகள் வழங்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு கேப்டன் அன்ஷுமான் சிங்கின் மனைவியும், தாயாரும் வருகை தந்திருந்தனர். மறைந்த வீரா்களுக்கு வழங்கப்பட்ட வீரதீர விருதுகளை அவா்களின் குடும்பத்தினா் பெற்று கொண்டனா்.

அப்போது கேப்டன் அன்ஷுமான் சிங்கின் மனைவி ஸ்மிரிதியிடம் கீர்த்தி சக்ரா விருதை வழங்கி கௌரவித்துள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. அப்போது இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாகப் புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜெனரல் உபேந்திர திவிவேதி உடனிருந்தார்.

விருதைப் பெற்றுக்கொண்ட கேப்டன் அன்ஷுமான் சிங்கின் மனைவி ஸ்மிரிதி சிங், தனது காதல் கணவர் அன்ஷுமான் சிங் பேசியதை நினைவுகூர்ந்துள்ளார். கேப்டன் அன்ஷுமான் சிங் பேசுகையில், சாதாரண மரணம் தன்னை அண்டாது எனவும், வீரமரணமடைவேன்! என்றும் தன்னிடம் கூறியிருந்ததை ஸ்மிரிதி சிங் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.

ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதியுடன் ப்டன் அன்ஷுமான் சிங்கின் மனைவி

ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதியுடன் ப்டன் அன்ஷுமான் சிங்கின் மனைவி - படம் | பிடிஐ

திருமணமான இரண்டே மாதத்தில் சியாச்சின் மலைப்பகுதியில் உள்ள ராணுவ முகாமில் மருத்து அதிகாரியாக சேவையாற்றி வந்தார் பஞ்சாபை சேர்ந்த கேப்டன் அன்ஷுமான் சிங். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் அங்குள்ள ராணுவ முகாம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் தன்னுயிரை பணயம் வைத்து, சக ராணுவ வீரர்கள் நால்வரை காப்பாற்றியுள்ளார் கேப்டன் அன்ஷுமான் சிங். எதிர்பாராத விதமாக, அவர் இந்த விபத்தில் உயிரிழந்தார்.

இந்த நிலையில், “முந்தைய நாளில் தன்னிடம் தொலைபேசியில் பேசிய கணவர், மறுநாள் உயிருடன் இல்லை என்ற தகவலை அறிந்ததும் தனால் அந்த செய்தியை நம்பவே முடியவில்லை, பிற குடும்பங்களைக் காப்பாற்றுவதற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துள்ளார் அவர்” எனக் கலங்கிய கண்களுடன் கூறியுள்ளார் ஸ்மிரிதி சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.