முன்னாள் ரயில்வே அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவர்கள்

முகுல் ராய் மருத்துவமனையில்: 24 மணி நேரமும் கண்காணிப்பு
முகுல் ராய்(கோப்புப் படம்)
முகுல் ராய்(கோப்புப் படம்)
Updated on
1 min read

முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் முகுல் ராயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் முகுல் ராய், தனது வீட்டின் குளியலறையில் புதன்கிழமை மாலை கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து அவர் வாந்தி எடுத்து மயங்கியும் விழுந்துள்ளார். உடனடியாக அவர் மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முகுல் ராயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவ நிறுவன அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.

மருத்துவர்கள் அவரை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

திரிணமூல் காங்கிரஸின் நிறுவன உறுப்பினர்களில் முகுல் ராயும் ஒருவர் ஆவார். அவர் 2017 இல் பாஜகவில் இணைந்து 2021ஆம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் கிருஷ்ணாநகர் உத்தர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இருப்பினும், அவர் மீண்டும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com