
குஜராத் மாநிலம் சூரத் நகரிலுள்ள அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று சனிக்கிழமை(ஜூலை 6) இடிந்து விழுந்துள்ளது.
சூரத் நகரிலுள்ள சச்சின் பகுதியில் அமைந்துள்ள 6 அடுக்குமாடிக் கட்டத்தில் சுமார் 30 குடியிருப்புகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டடம் இடிந்ததபோது குடியிருப்புவாசிகள் கட்டடத்தின் உள்ளே மாட்டிக்கொண்டுள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை 3 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த அடுக்குமாடிக் கட்டடத்திலுள்ள 4 - 5 குடியிருப்புகளில் மட்டுமே மக்கள் வசித்து வந்ததாகவும், மீதமுள்ள குடியிருப்புகள் காலியாக இருந்ததால் பெருத்த உயிர்ச்சேதம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும், மேற்கண்ட குடியிருப்புகளில் பெரும்பாலானோர் பணிக்கு சென்றுவிட்ட நிலையில், இரவுப் பணிக்கு சென்றுவிட்டு ஓய்வெடுக்கு கொண்டிருந்த 5 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
மீட்ப்புப்பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் இருந்து ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.