வங்கதேச அகதிகளை திருப்பியனுப்ப முடியாது: மிசோரம் முதல்வர்!

வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகளை அவர்களது நாட்டுக்குள் திருப்பி அனுப்பவோ, நாடு கடத்தவோ முடியாது என்று மிசோரம் முதல்வர் தெரிவித்துள்ளார்.
லால்துஹோமா
லால்துஹோமா
Published on
Updated on
1 min read

வங்கதேசத்து அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் விஷயத்தில் மிசோரமின் நிலைப்பாட்டை மத்திய அரசு புரிந்து கொள்ளுமாறு கூறியுள்ள மிசோரம் முதல்வர் லால்துஹோமா அவர்களது நாட்டுக்குள் அவர்களை திருப்பியனுப்ப முடியாது என்று அறிவித்துள்ளார்.

வங்கதேசத்தைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட ஸோ இன மக்கள் கடந்த 2022-ம் ஆண்டு முதல் மிசோரமில் தஞ்சமடைந்துள்ளனர்.

பிரதமர் மோடியுடன் நேற்று (ஜூலை 6) நடந்த சந்திப்பிற்குப் பிறகு முதல்வர் லால்துஹோமா வெளியிட்ட அறிக்கையில் இந்தியா மற்றும் வங்கதேச எல்லையிலுள்ள சிட்டகாங் மலைப்பகுதிகளில் தஞ்சமடைந்துள்ள ஸோ இன மக்களை தன்னுடைய அரசு அவர்களது நாட்டுக்குள் திருப்பித் தள்ளவோ, நாடு கடத்தவோ முடியாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

லால்துஹோமா
வங்கதேசத்தில் வெள்ளம்: 8 பேர் பலி, 20 லட்சம் மக்கள் பாதிப்பு!

வங்கதேசத்து அகதிகளுடன் மிசோரம் மக்கள் இனரீதியான பிணைப்பில் உள்ளனர்.

பழங்குடி மிசோ இனத்தில் ஒன்றான பாம் பழங்குடியின மக்கள் கடந்த 2022-ஆண்டு முதல் மிசோரமில் தஞ்சமடைந்துள்ளதாகவும், மேலும் பலரும் மாநிலத்துக்குள் நுழைய முயற்சித்து வருவதாகவும் பிரதமரிடம் முதல்வர் தெரிவித்தார்.

கிளர்ச்சியாளர்களின் குழுவான குக்கி-சின் தேசிய ராணுவத்தின் (கேஎன்ஏ) மீடு வங்கதேச ராணுவம் நடத்தியத் தாக்குதலால் நவம்பர் 2022 முதல் மிசோரம் மாநிலத்தில் அடைக்கலத்திற்காகத் தஞ்சம் புகுந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com