கர்நாடகத்தை அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்: 7 பேர் பலி, 7000 பேர் பாதிப்பு!

பெங்களூருவில் மட்டும் 1,908 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்தை அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்: 7 பேர் பலி, 7000 பேர் பாதிப்பு!
Published on
Updated on
1 min read

கர்நாடகத்தில் ஜூலை 6 ஆம் தேதி நிலவரப்படி, 7,000 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூருவில் மட்டும் 1,908 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் பலியாகியுள்ளனர்.

கர்நாடகத்தின் பெங்களூருவில் மட்டும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது சுகாதாரத்துறை அதிகாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கமகளூருவில் 521 பேரும், மைசூருவில் 496 பேரும், ஹவேரியில் 481 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சித்ரதுர்காவில் 275 பேரும், தார்வாட்டில் 289 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசிகெரே தாலுகாவில் உள்ள முதுடிதாண்டாவில் வசிக்கும் 23 வயதான சுப்ரீதா, கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். நான்கு நாட்களுக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடக் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு முதல் பலி: 

கடக் தாலுகா ஷிருஞ்சா கிராமத்தைச் சேர்ந்த சிராய் ஹோஸ்மானி என்ற 5 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தான்.

மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவும் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் லார்வாக்களை அழிக்க குப்பி, கம்பூசியா மீன்கள் தண்ணீர் தொட்டிகளில் விட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தபோதிலும், சில அறிக்கைகள் டெங்குவின் உருமாற்றம் இந்தாண்டு லேசானதாகவும், குறைவான அறிகுறிகளுடன் இருப்பதாகவும் தெரிவிக்கின்றன.

சுகாதார அதிகாரிகள் தூய்மை, கொசு ஒழிப்பு மற்றும் தொற்றுநோயை திறம்பட நிர்வகிக்க பொது விழிப்புணர்வு ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.

கர்நாடத்தில் இந்தாண்டு முதல் ஜிகா மரணமும் பதிவாகியுள்ளது. ஒருவர் சிகிச்சையில் உள்ளார். டெங்கு நோய்த்தொற்றுக்கு 7 பேர் பலியான நிலையில் 7,000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com