
குல்காம் மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடந்த என்கவுன்டர்களில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்களில் சனிக்கிழமை பாதுகாப்புப் படையினர்-பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிசூடு சம்பவங்கள் நடைபெற்றன.
அதில் மாடர்கம் என்கவுன்ட்டர் தளத்தில் இருந்து இரண்டு பயங்கரவாதிகளின் உடல்களும், சின்னிகம் தளத்தில் இருந்து நான்கு பயங்கரவாதிகளின் உடல்களும் மீட்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவங்களின்போது ராணுவ அதிகாரி உள்பட 2 வீரர்களும் பலியாகினர். இத்துடன் இரண்டு வெவ்வேறு என்கவுன்டரில் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர்.
தொடர்ந்து அப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டைகள் நடைபெற்று வருவதாக பாதுகாப்புப் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்திருப்பதால் அவர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.