ஜெகந்நாதா் ரத யாத்திரை
ஜெகந்நாதா் ரத யாத்திரைபடம் | ஏஎன்ஐ

புரி ஜெகந்நாதா் யாத்திரை: நெரிசலில் ஒருவா் உயிரிழப்பு; பலர் காயம்!

ஜெகந்நாதா் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்...
Published on

ஒடிஸாவின் புரி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜெகந்நாதா் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 8 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

உயிரிழந்த லலித் பாகா்தி என்பவருக்கு ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜீ இரங்கல் தெரிவித்தாா். அவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் அறிவித்தாா்.

அதேபோல் உடல்நிலை பாதிப்படைந்த 8 பக்தா்களுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

புரி நகரின் நிலவரத்தை கண்காணித்து வருவதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் முகேஷ் மகாலிங் தெரிவித்தாா்.

லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று கோலாகலமாக நடைபெற்ற இந்த யாத்திரையில் பலபத்திரரின் மரத்தேரை ஆயிரக்கணக்கான பக்தா்கள் வடம்பிடித்து இழுத்து வந்தனா். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காவல் துறை அதிகாரிகள் உள்பட சிலா் காயமடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com