அசாமில் ராகுல்
அசாமில் ராகுல்-

அசாம் வெள்ள நிவாரண முகாமில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் ராகுல்

அசாம் வெள்ள நிவாரண முகாமில் தங்கியிருப்பவர்களை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி.

கடுமையான வெள்ளம் பாதிக்கப்பட்ட அசாமில், அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்கியிருப்பவர்களை நேரில் சந்தித்துப் பேசினார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்.

புது தில்லியிலிருந்து வன்முறை பாதித்த மணிப்பூர் செல்லும் வழியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்துக்குச் சென்றார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி.

அசாம் வந்த ராகுல் காந்திக்கு, காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். காங்கிரஸ் கட்சி சார்பில், அசாம் வெள்ளம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, மத்திய அரசிடம் கோரி, நிவாரண மற்றும் இழப்பீடு பெற்றுத்தருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசிடமிருந்து போதிய நிதியைப் பெற்று உரிய நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அசாம் அரசு தவறிவிட்டதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியிடம் குற்றம்சாட்டியுள்ளனர்.

கச்சார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார். அவர்களது குறைகள் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். பிறகு அசாமிலிருந்து புறப்பட்டு மணிப்பூர் சென்றார் ராகுல் காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com